
வெள்ளி விழா ஆண்டில் ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன்
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா என்பது ஒரு மிக சிறிய உலகம் என்று தான் சொல்லணும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் படங்கள் தயாரிப்பது கிடையாது காரணம் அந்த அளவுக்கு வியாபாரம் என்பது இல்லை குறிகிய செலவு தரமான படங்களை கொடுத்து கொண்டு இருந்த கட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரமாண்டத்தை கொண்டு வந்த பெருமை K.T.குஞ்சுமோனை சேரும் என்று சொன்னால் மிகையாகது லட்சங்களை கோடியாக மாற்றியவர்
ஏன் தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்று வந்த முதல் படம் என்றால் அது செலவில் மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சரி கதை மற்றும் காட்சியமிப்பிலும் சரி பிரமாண்டத்தை கொண்டுவந்த பெருமை அவரை தான் சேரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தவரும் இவர் தான் அதே போல ஹிந்தி நடிகைகளை தமிழுக்கு கொண்டுவந்த பெருமையும் இவரை சாரும் இந்த நிறுவனம் இந்தாண்டு வெள்ளி விழாவை கொண்டாடுகிறது ...