குரங்கு பொம்மை தமிழ் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் உருவாகிறது
சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ரசிக்கப்பட்ட ஒரு தரமான வெற்றி படத்தை மற்ற மொழிகளிலும் படமாக்கப்படுவது இயல்பே. தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் நித்திலனின் வித்யாசமான கதைக்காகவும் அதன் மிக சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும் கொண்டாடப்பட்ட 'குரங்கு பொம்மை' படத்தின் தெலுங்கு உரிமத்தை 'S Focuss' நிறுவனம் பெற்றுள்ளது. தரமான, சுவாரஸ்யமான படங்களை மக்களுக்கு தருவதில் எப்பொழுதுமே முனைப்போடு இருக்கும் 'S Focuss' தயாரிப்பு நிறுவனம் 'குரங்கு பொம்மை' படத்தை தெலுங்கில் படமாக்கவுள்ளது. 'குரங்கு பொம்மை' பட கதை எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி ரசிக்கப்படும் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று.
''திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடைய...