
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஒவ்வொரு சிறந்த படங்கள் வரும் அந்த வகையில் இந்த வருடத்தின் மிக சிறந்த திரை படம் என்று தான் குரங்கு பொம்மை என்று சொல்லணும். படம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்து இயக்குனர் நித்திலன் நம்மை கவருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் மிக சிறந்த திரைகதை என்று சொல்லணும். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து தான் இயக்குனர் நித்திலன் என்று சொல்லும் அளவுக்கு மிக திறமையான ஒரு இயக்குனர் என்று சொன்னால் மிகையாகது.
தமிழ் சினிமாவுக்கு ஹீரோவை தவிர பல முகங்கள் அந்த அளவுக்கு தெரிந்த முகங்கள் இல்லாமல் அப்ப அப்ப வந்த அதாவது ஒரு சில படங்கள் நடித்த நடிகர்களை வைத்து தன் கதைக்கும் கதபாதிரதுக்கும் என்ன தேவையோ அவர்களை வைத்து படம் முழுவதும் நம்மை பிரமிக்க வைக்கிறார். முதல் பாதி விறுன்னு முடியுது அதைவிட இரண்டாம் பகுதி நம்மை பல இடங்களில் நாற்காலியின் நுனிக்கு வரவைக்கிறார் அந்த அளவுக்கு ஒரு திரைகதை இதியெல்லாம் விட படத்தின் வில்லனுக்கு ஹீரோ விதார்த் கொடுக்கும் முடிவு மிக சிறந்த முடிவு இப்படி ஒரு கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவுக்கு பயங்கர புதுமை என்பதைவிட அறிவுபூர்வமான கிளைமாக்ஸ் என்று சொல்லணும் இந்த கிளைமாக்ஸ்க்கு அரங்கமே அதிருகிறது.
சரிவாங்க படத்தின் கதை மற்றும் நட்சத்திரங்கள் யார் என்று பார்ப்போம்
படத்தின் நாயகனாக இல்லை கதையின் நயாகனாக விதார்த் நாயகியாக டெல்னா டேவிஸ் படத்தின் முக்கிய பங்கு நாயகன் அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அம்மாவாக ரமா பாரதிராஜா நண்பனாக தயாரிப்பாளர் தேனப்பன் அவரின் கையாளாக குமரவேல் மற்றும் கல்கி பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் அஜினிஷ் லோக்நாத் இசையில் N.S.உதயகுமார் ஒளிப்பதிவில் அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் குரங்கு பொம்மை
தஞ்சையில் மிகவும் நடுத்தரமான குடும்பம் பாரதிராஜா அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் மகன் விதார்த் அவர் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனர் அவருக்கு பெண் பார்க்க போகிறார்கள். அங்கு பாரதிராஜா வேலை செய்யும் உரிமையாளர் தேனப்பன் என்றதும் பெண் கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறார்கள்.
காரணம் அவர் செய்யும் தொழில் அப்படி ஊருக்கு ஒரு மரபட்டறை ஆனால் செய்வது கள்ளகடத்தல் இவை தெரிந்தும் தேனப்பனிடம் வேலை செய்யும் பாரதிராஜா காரணம் அவர்களின் நட்பு அதுக்காக அவர் என்ன சொன்னாலும் செய்வார் பாரதி ராஜா அப்படி தான் ஒரு ஐம்பொன் சிலையை கடத்தி சென்னையில் விற்க அனுப்புகிறார்.
பாரதிராஜா அதில் என்ன இருக்கு என்று தெரிந்துகொண்டே எடுத்து செல்கிறார் அந்த சிலை இருக்கும் பையின் அடையாளம் தான் குரங்கு பொம்மை போட்ட பை விதார்த் வரும் வழியில் இந்த குரங்கு பொம்மை போட்ட பையை ஒருவர் எடுத்து வர அவரிடம் இருந்து அந்த பையை ஒருவன் திருடி விடுகிறான். இதை பார்த்த விதார்த் அவருக்கு உதவ அந்த திருடனை விரட்டி பையை பிடுங்கி வருகிறான் ஆனால் அந்த பைக்கு சொந்தகாரர் அங்கு இல்லை இதை இவர் போலீசிடம் சொல்ல அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் அங்கு ஒரு விபத்து நடக்க அந்த பையுடன் மீண்டும் வெளியில் வருகிறார் எப்படியாவது அந்த பையை உரியவரிடம் கொடுக்கவேண்டும் என்று முயற்சிக்கிறார் ஆனால் அது தோல்வியில் முடிய அந்த பையை படம் பிடித்து பேஷ் புக்யில் போடுகிறார் அந்த சமயம் அவர் அப்பவா பாரதிராஜா காணவில்லை என்று அம்மா சொல்ல பையும் சிலையும் அப்பா பாரதிராஜா என்ன ஆனார் என்பது தான் மீதி கதை
விதார்த் சமீபகாலமாக மிக சிறந்த கதைகளாக தேர்ந்த்டுத்து நடிக்கிறார். அதில் அவர் தேர்ந்தெடுத்த மிக சிறந்த கதையும் படமும் இதுவாக தான் இருக்க முடியும் அதேபோல இந்த கதைக்கு சரியான ஹீரோ இவரால் மட்டும் தான் இருக்க முடியும் இது இயக்குனரின் மிக சிறந்த தேர்வு என்றும் சொல்லலாம். கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் விதார்த்
அதே போல நாயகி டெல்னா டேவிஸ் இந்த கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு என்று தான் சொல்லணும் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை மிக நேர்த்தியாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும்
அறிமுக வில்லனா இல்ல குணசித்திர நடிகரா என்று நீங்கள் தான் இவரை முடிவு செய்யணும் ஆனால் சரியான தேர்வு என்று தான் சொல்லணும் இப்படி ஒரு நடிகரை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை தயாரிப்பாளர் தேனப்பன் மிக சிறந்த நடிப்பு இவரின் கதாபத்திரம் சொல்ல முடியாது சொன்னால் படத்தின் சுவாரிசம் போகிவிடும்

குமரவேல் தமிழ் சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகர் என்று அபியும் நானும் படத்திலே நிரூபித்தவர் இந்த சிறந்த குணசித்திர நடிகர் என்று சொன்னால் மிகையாகது ஆனால் இந்த படத்தின் இயக்குனர் இவரை மிக நேர்த்தியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். படத்தை பார்த்து வரும்போது அடேங்கப்பா இவரா என்று வியக்கும் அளவுக்கு நம்பத்தகாத ஒரு கதாபத்திரம் அப்படி ஒரு நடிப்பு அரங்கமே இவருக்கு கைதட்டும் அளவுக்கு ஒரு நடிப்பு என்று தான் சொல்லணும் .
இயக்குனர் நித்திலன் நிச்சயம் தமிழ் சினிமாவின் ஒளிரும் நம்பிக்கை நட்சத்திரம் என்று தான் சொல்லணும் மிக சிறந்த இயக்குனர்களில் இவரும் வருவார் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை என்று சொல்லலாம்
படத்துக்கு இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் எல்லரும் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளனர் என்று தான் சொல்லணும் கல்கி என்ற ஒரு புதுமுக காமெடி நடிகர் அவரும் சிறப்பாக நடித்துள்ளார். குறைந்த கதாபத்திரம் நிறைவான ஒரு படம் குரங்கு பொம்மை
நிச்சயம் இந்த வருடத்தின் முக்கிய படம் தான் குரங்கு பொம்மை Rank 4.5/5
