குருப் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)
இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை ஷோபிடா துலிபலா நடிப்பில் வெளியாகியுள்ள குருப் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.
நாயகன் துல்கர் சல்மான் விமான படையில் பயிற்சி எடுத்து பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்துச் செல்லும் துல்கர் சல்மான், சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான், தனது பெயரை குருப் என்று மாற்றி வெளிநாடு செல்கிறார்.
வெளிநாட்டில் தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் செய்து விட்டு இந்தியா திரும்பும் துல்கர் சல்மான், அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்ப...
