Sunday, December 3
Shadow

Tag: #laalsalaam #rajinikanth #vishnuvishal #aishwarya #vikranth #lyca

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 3-வது படமமான லால் சலாம் பூஜையுடன் துவங்கியது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 3-வது படமமான லால் சலாம் பூஜையுடன் துவங்கியது

Latest News, Top Highlights
கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ' *லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்* *சிறப்பு தோற்றத்தில்* நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன்...