Wednesday, November 29
Shadow

Tag: #labam #vijaysethupathy #saidhanshika #jananathan #suruthihaasan

விஜய்சேதுபதி நடிப்பில் ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் இணைந்தார் தன்ஷிகா !!

விஜய்சேதுபதி நடிப்பில் ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் இணைந்தார் தன்ஷிகா !!

Latest News, Top Highlights
சமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை கமர்சியலாக கொடுத்து வரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் தற்போது இன்னொரு லாபகரமான செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். படத்தில் அவரது கதாபாத்திரமும்  தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம் . குறிப்பாக படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட தன்ஷிகா மேலும் படம் பற்றி கூறியதாவது, "ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடு...