Thursday, June 25
Shadow

Tag: latest news about Ajith

ரொம்ப நாள் கழித்து பொதுநிகழ்ச்சி கலந்து கொள்ளபோகும் தல? எப்பொழுது?

ரொம்ப நாள் கழித்து பொதுநிகழ்ச்சி கலந்து கொள்ளபோகும் தல? எப்பொழுது?

Latest News
தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட முக்கியமான முன்னணி நடிகர் தல அஜித்குமார்.இவர் பெரும்பாலும் இசை வெளியீட்டு விழா , பொது நிகழ்ச்சிகளிலோ பங்கேற்க மாட்டார்.நடிகர் அஜித்குமாரை இவரது ரசிகர்கள் திரைப்படத்தில் மட்டுமே பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.தற்போது மலேசியாவில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சார்பாக நடைபெற உள்ள கலைநிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார் அவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.பொதுவாக கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கும் தல அஜித்குமார் அவர்கள் இப்போது நேர் மாறாக "அப்புறம் சொல்றேன்"என்று கூறினாராம். இந்த செய்தியை அறிந்த அஜித்குமாரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்....