LKG – திரைவிமர்சனம் (அவசியம் பாருங்க) Rank 4.5/5
ஆ.ஜே.பாலாஜி நடிகர் அதையும் தாண்டி நல்ல மனிதர் மனிதநேயம் மிக்கவர் என்பது சென்னையில் வந்த அடை மழை போது நாம் அறிந்த விஷயம் அதோடு அவர் நல்ல பகுத்தறிவாளர் நல்ல விஷயத்துக்கும் அநியாதுக்கும் குரல் கொடுப்பவர் என்பது நாம் அறிந்த விஷயம் அதோடு அவருக்கு என்று ஒரு நையாண்டி உண்டு அந்த நையாண்டி ஸ்டைலில் தான் எல்.கே.ஜி படத்தை கொடுத்துள்ளார் .
சாதாரண ஒருவர் எப்படி மாநிலத்தின் முதல்வராகிறார் எனும் கருவோடு வந்திருக்கும் படமே எல்.கே.ஜி. படத்தின் டைட்டில்எல்.கே.ஜி ஆனால் படத்தின் கதை இல்லை கரு எம் .ஏ, பி.எச்.டி அந்த அளவுக்கு அரசியல் கருத்தை சொல்லும் படம் என்று தான் சொல்லணும்
லால்குடி கருப்பையா காந்தி என்ற எல்கேஜி (ஆர்ஜே பாலாஜி) மாநிலத்தில் முதல்வராகிறார். இது தான் படத்தின் தொடக்கம். அவர் எப்படி முதல்வராகிறார்? எனும் கருவை மையப்படுத்தி வந்திருக்கும் நக்கல் நய்யாண்டி கலந்த காமெடி படம் தான் எல்கேஜி.
லால்க...