
மூன்றாவது முறையாக இணையும் சூர்யா மற்றும் இயக்குனர் K.V.ஆனந்த்
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் இன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், "எனது அடுத்த பட நாயகன் சூர்யா.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்,'' எனத் தெரவித்துள்ளார்.
'அயன்', 'மாற்றான்' படங்களுக்குப் பின் 3-வது முறையாக, சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி 'சூர்யா 37' படத்துக்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது....