தனுஷ் படத்தின் மீண்டும் ஒரு வியக்க வைத்த புதிய சாதனை
தமிழ் சினிமாவில் பாடல்களை அதிகமாக டிரண்டிங் கொண்டு வருபவர் என்றால் அது தனுஷ் தான் ஆம் இவர் நடிப்பில் வெளியான 3 படத்தில் இருந்து வோய் திஸ் கொலை வெரி உலக அளவில் மிக பெரிய தாக்கத்தை கொண்டு வந்த பாடல் என்று சொன்னால் மிகையாகது அதேபோல தற்போது ரவுடி பேபிஉலக அளவில் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் யு டியுபில் 15 கோடி பார்வைகளைக் கடந்து மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 2ம் தேதி யு-டியுபில் வெளியிடப்பட்ட இந்தப்பாடல், ஒரு மாத காலத்திற்குள் 15 கோடி பார்வைகளைப் பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்த் திரைப்பட வீடியோ பாடல்களில் முதல் முறையாக 15 கோடி பார்வைகளைக் கடந்த பாடல் என்ற பெருமையை இந்தப் பாடல் பெற்றுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பார்வைகள் இந்தப் பாடலுக்கு கடந்த ஒரு மாத காலமாக கிடைத்து வருவது ஆச்சரியமளிப்ப...