Tag: #maari2 #dhanush #saipallavi #balajaimohan

தனுஷ் – பாலாஜிமோகன் மாரி 2 படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் மாரி 2 படத்தின் அறிவிப்பு பற்றி அதிகார பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் பாலாஜி மோகன் வெளியிட்டிருந்தார்.
இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்ன்ன ஆகியோர் கலந்து கொண்டனர். மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்க...