தலைப்புப் பிரச்சனையில் தவிக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை கடந்த ஒரு வருட காலமாக இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இந்தப் படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிடப் போவதாக முருகதாஸ் சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
இருந்தாலும், படத்தின் தலைப்பையே அறிவிக்காமல் ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருப்பது இதுதான் முதல் முறை என கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்திற்கு 'சம்பவாமி' என தலைப்பை முடிவு செய்து வைத்திருந்தார்களாம்.
ஆனால், அந்தத் தலைப்பு படத்தின் நாயகனான மகேஷ் பாபுவுக்குப் பிடிக்கவில்லையாம்.
படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியிட இருப்பதால் மூன்று மொழிக்கும் பொதுவான தலைப்பை வையுங்கள் என்று கேட்டுக் ...
