“ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!” – ‘தி டார்க் ஹெவன்’ விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு
"ட்ரெய்லர் பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது!" – 'தி டார்க் ஹெவன்' விழாவில் மனம் திறந்த வேல ராமமூர்த்தி; போராட்டத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு
சென்னை:
"ஒரு திரைப்படம் உருவாகுவது வெறும் படப்பிடிப்பு அல்ல; அது ஒரு போராட்டம்" என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திய நிகழ்வாக அமைந்தது 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா.
கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்த மர்ம கிரைம் திரில்லர், நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய அம்சங்களை நவீன விசாரணை கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "ஒரே மாதிரியாக நடைபெறும் ஐந்து கொலைகள்... ஆனால் எந்தத் தடயமும் இல்லை" என்ற சுவாரஸ்யமான கருவை மையமாகக் கொண்ட இப்படம், ஜூலை 17ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளிய...
