பத்திரிக்கையாளரை தாக்கிய இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்டார் .
இந்திய சினிமாவின் மிக பெரிய மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இது நாம் அறிந்த விஷயம் தற்போது இவர் இயக்கி கொண்டு இருக்கும் படம் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி பிரபல ஹீரோ அக்ஷய்குமார் எமி ஜாக்சன் மற்றும் பல நடிக்கும் 2.௦ படம் இந்தியாவிலே அதிக பொருள் செலவில் உருவாகும் படம் என்றால் அது இந்த படம் தான் என்று சொல்லணும் .
இவர் அதிக செலவில் படம் எடுக்கலாம் அதுக்காக இந்த உலகமே அவருக்கு சொந்தம் ஆகிவிடாது இல்லையா ஆம் நேற்று இவர் படபிப்பில் செய்த தவறால் நடந்த விஷயம் வாங்க பார்க்கலாம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.
புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் 2.0 படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'தி இந்து' பத்திரிகையாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன்,...

