Tuesday, August 25
Shadow

நடிகை மாயாவிடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதில் கூத்துப்பட்டறையில் பயின்ற மாயா என்ற புதுமுக நடிகை தனுஷின் தொடரி மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இது பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில் ” இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலே என்னுடய காட்சி தான், அதுவும் ரஜினி சாருடன் இணைந்து நடிக்கும் காட்சி என்பதால் கொஞ்சம் பயம்.

இருந்தாலும் நல்லா நடிக்க வேண்டும் எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ஒரு சமயம் நானும் ரஜினி சாரும் நடிக்கும் காட்சி படமாக்கி கொண்டிருந்தார்கள், அந்த நேரத்தில் ரஜினி சார் 4, 5 டேக் எடுத்து கொண்டதால் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

என்னடா நடக்குது என்னிடம் போய் மன்னிப்பு கேட்கிறாரே என்று சங்கடமாக இருந்தது.

ஆனால் எல்லாரும் சொல்லும் அவருடைய எளிமை அப்போது தான் எனக்கு புரிந்தது என்றார்.

Leave a Reply