மெர்சல் படத்துக்கு தடை நீங்கியது உயர்நீதிமன்றம்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.
2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார். இந்த தலைப்பை தற்போது விஜய் நடித்துள்ள படத்திற்கு ‘மெர்சல்’ தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்...
