ரஜினியை வைத்து `முதல்வன்-2′ படத்தை இயக்கும் ஷங்கர்
ரஜினிகாந்த் நடிப்பில் `2.0' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `காலா' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். விரைவில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற தலைப்பில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் மாற்றத்தை விரும்புகிறவர்களை இணையும்படி தெரிவித்திருந்தார். தற்போது வரை அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ரசிகர்கள் சந்திப்பின் போது, `காலா' படத்திற்கு என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார...
