இன்றைய அரசியலை படம் போட்டுக்காட்ட போகும் நான் ஆணையிட்டால்
தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தான் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட நேரடிப்படம் என சொல்லும் அளவுக்கு இந்தப்படத்தில் மயில்சாமி, ஜெகன், ஆர்.எஸ்.சிவாஜி என நம்முடைய காமெடி நட்சத்திரப்பட்டாளமே இதில் நடித்துள்ளது. மேலும் காரைக்குடி பகுதியில் தான் முக்கால்வாசி படத்தையும் படமாக்கியுள்ளனர். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார்.. இதில் ராணா பக்கா அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட்-11ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர் தேஜா, “நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.. ஆனா எனக்குத் தமிழ் தெளிவா பேச வராது.. தெரியாது-ன்னுதான் சொல்லணும் தெரியாது என்று சொல்லியே சகலத்தையும் மனசு விட்டு கொட்டி விட்டார். சென்னை பாண்டி பஜாரின் பிளாட்பாரத்தில் படு...
