முதலவர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கம்இரங்கல்
நம்மை விட்டு சென்றது ஒரு தனி மனிதர் அல்ல சகாப்தம் முடிந்திருக்கிறது. ஒரு சரித்திரம் முடிந்திருக்கிறது. ஒரு நடனமணியாக , ஒரு நடிகராக , ஒரு கட்சியின் தலைவராக , அரசின் தலைமையாக அவர் கால் வைத்த எல்லா துறைகளிலும் உட்சாணியை தொட்டு இருக்கிறார். பல்லாண்டு காலம் அடிமைபட்டிருந்த பெண் இனத்தில் ஒரு பெண் நினைத்தால் , தைரியத்துடன் முன் சென்றால் எந்த அளவிற்கு செல்லலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார். எங்கள் நடிகர் சமூகத்திற்கு ஒரு மரகத மணி போல் அவர் ஒலித்து கொண்டு இருக்கிறார். எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்திருக்கிறார் , எங்கள் சங்கத்தின் பால் ,மிக அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். அவருடைய சக்தி , அவருடைய செயல் எங்களை முன்னெடுத்து செல்லும். இந்த தருணத்தில் அவரை பிரிந்து வாடும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நடிகர் சமூகத்தின் சார்பாகவும் , எங்கள் திரையுலகத்தின் சார்பாகவும் எங்களின் ஆழ்ந்த இர...
