குழந்தைக்கு தாயாக நடிக்கும் நந்திதா சுவேதா
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா. இருவருமே தற்போது மீடியம் பட்ஜெட் படங்களின் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பெரும் பாராட்டை பெற்றார். பல விருதுகளையும் பெற்றார்.
தற்போது நந்திதாவும் 7 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, 5ம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, சமீபத்தில் வெளிவந்த காத்திருப்போர் பட்டியல் படங்களில் நடித்த ஸ்வேதா நர்மதாவில் அம்மாவாக நடிக்கிறார்.
ஜி.ஆர்., மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் 'நர்மதா'. நந்திதா ஸ்வேதாவுடன் விஜய் வசந்த், எம்எஸ் பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சதீஸ் ...