அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா என்ன வேடம் கசிந்தது
அஜித்தை வைத்து சிவா நான்காவது முறையாக இயக்கிவரும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக அஜித்துடன் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என நான்கு காமெடியன்கள் இந்தப் படத்தில் நடிக்க, போஸ் வெங்கட், கலைராணி, ரமேஷ் திலக், சுஜாதா சிவகுமார், ‘ஜாங்கிரி’ மதுமிதா, நமோ நாராயணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
...