விஜய் 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார ரசிகர்கள் கேள்விக்கு பதில்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி செராப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி செராப் இணைந்துள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டது.இதையடுத்து என்ன update வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு படக்குழுவினரை...
