
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி செராப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி செராப் இணைந்துள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டது.இதையடுத்து என்ன update வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு படக்குழுவினரை கவனித்து வந்தனர்.இந்நிலையில் ட்விட்டரில் இயக்குனர் அட்லீயும்,தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் ஷாருக்கானை பின்தொடர தொடங்கினர்ட்விட்டரில் உள்ள ரசிகர்கள் இந்த நிகழ்வை வைத்து ஜாக்கி செராப்-ஐ அடுத்து இந்தியாவின் மாபெரும் நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கானை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகின்றனர் என்று பேச தொடங்கினர்.மேலும் இயக்குனர் அட்லீ குறைவான பாலிவுட் பிரபலங்களையே பின்தொடர்வதால் நிச்சயமாக ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு காட்டுத்தீயாய் பரவியது.
ஷாருக்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா இந்த செய்தி உண்மை தானா என்பதை அறிய விஜய் தரப்பினரை தொடர்பு கொண்டோம்.அப்போது அவர்கள் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று மறுத்துவிட்டனர்.விஜயும் ஷாருக்கானும் ஒரே படத்தில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.வெறும் செய்தி வெளியானதற்கே ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
உண்மையிலேயே இந்த இரண்டு மாஸ் ஹீரோக்களும் இணைந்து படம் செய்தால் நிச்சயம் அது மிகபெரிய வெற்றிப்படமாக அமையும்.ரசிகர்களை போலவே நாங்களும் விஜய்-ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் பார்க்க ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறோம்