சூப்பர்ஸ்டாருடன் நடிக்க நயன்தார சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா என்று நாம் அறிந்த விஷயமே சினிமாவில் கால் பதித்த நாள் முதல் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில் தான் முதன்மை என்று வழிவகுத்தவர் நயன்தாரா நாளுக்கு நாள் அவருக்கு வயது கூடுதோ இல்லையோ அழகும் சம்பளமும் கூடி கொண்டே தான் போகுது.
நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’ கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன. காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை.
சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்கள் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்ததுடன் அவரது நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தின. காது கேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான், பேயாக வந்த மா...
