Sunday, June 28
Shadow

Tag: #nayepeye #dinesh #aishwarya #sakthivasan #thambiramaiya

25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”

25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் “நாயே பேயே”

Latest News, Top Highlights
தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே” எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை எடிட்டர் மோகன் துவக்கி வைத்தார். இத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். ‘பருத்தி வீரன்’, ‘ஆடுகளம்’, ‘இறுதிசுற்று’, ‘ஓகே ஓகே’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் ஆட வைத்த நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ...