நயன்தாரா நடிக்கும் அறம் படத்தின் கதை படக்குழுவினரால் கசிந்தது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று புகார் தெரிவித்தவர் கோபி. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் தயார் செய்துள்ள கதை தற்போது நயன்தாராவை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
பெயர் வைக்காமலேயே ராமநாதபுரத்தில் பெரும்பகுதி படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்துக்கு ‘அறம்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், வேல. ராமமூர்த்தி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நயன்தாராவின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சௌந்தர் பைரவி கூறும்போது “இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டது. இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் அவர் அறம் சார்ந்து பல நல்ல விஷயங்களை செய்ய முயல்கிறார்....