நடிகை நீத்து சந்திரா பிறந்த தினம் இவரை பற்றி ஒரு சில வரிகள்
நீத்து சந்திரா இந்தியாவில், பீகார் மாநிலத்தில், பாட்னாவில் பிறந்தவர். அவர் பாடலிபுத்ரா காலனியில் வசித்து வந்தார்; பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளிக்கூடத்தில் படித்தார். இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர், நீத்து ஒரு விளையாட்டு வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர் டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் பிளாக் பெல்ட் பெற்றவர்.. அவர் இந்தியாவின் சார்பாக 1996 ஆம் ஆண்டில் ஹாங் காங் நகரத்தில் நடைப்பெற்ற சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் கலந்து கொண்டார். மேலும் 1995 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைப்பெற்ற உலக கோர்ப்பால் எனப்படும் உலக வலைப்பந்தாட்ட போட்டியிலும் கலந்துக் கொண்டார். அவர் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை (1996) இளம் 16 வயதிலேயே முடித்துவிட்ட்டார்..
ஒரு வியாபாரியான நீத்துவின் தந்தை, ஆரம்பத்தில் இவர் மாடல் தொழிலில் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் விருப்பமின்றி இருந்தார், ஆனால் அவரத...
