தமிழில் அதிரடியாக அறிமுகம் ஆகும் புதிய அதிரடி ஆக்சன் புருஷ்லீ
S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’.
இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – சிவசங்கர், இசை – செளந்தர்யன், நடன இயக்கம் – ராபர்ட், மனோஜ், படத் தொகுப்பு – தங்கவேல், எழுத்து, இயக்கம் – ஏ.சோணை.
இந்தப் படத்தில் உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான ‘புரூஸ்லீ’ மாதிரியான தோற்றத்தில் நாயகன் புரூஸ் சான் நடித்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் தனி சிறப்பம்சமாகும்.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியிட்டூ விழா இன்று மதியம் ஆர்.கே.வி. தியேட்டரில் நடைபெற்றது. அப்போது படம் பற்றி இயக்குநர் முளையூர் ஏ.சோனை விரிவாகவே பேசினார்.
அவர் பேசும்போது, “உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்...