விஜய் ஆன்டனி மற்றும் நிவேதா பெத்து ராஜ் நடிக்கும் திமிருப்பிடிச்சவன் பூஜையுடன் துவங்கியது
பொதுவாக தமிழ் திரை உலகில், ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்றாலே நாம் எளிதில் யூகிக்க முடிகிற கதை அமைப்பு, காட்சி அமைப்பு என்றுதான் இருக்கும்.
விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் "திமிரு புடிச்சவன்" வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது.
"வழக்கத்தில் இருந்து மாறு பட்டு , இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கதையாக வடித்து இருக்கிறேன்.ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்கும். இந்த கதையை எழுதும் போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் கதை சொன்னேன். இன்னும் சில காலம் போகட்டும் என்றார். இன்ற...