திரிஷா படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்
மலையாளத்தில் ‘இவடே’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஷியாமபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹேய் ஜூட்’ (HEY JUDE). இதில் ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். நிவினுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சித்திக், நீனா குருப், விஜய் மேனன், அஜு வர்க்கீஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கோபி சுந்தர் – ராகுல் ராஜ் – எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அம்பளகாரா குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் வெற்றிகரம...