150 இசைக்கலைஞர்களைக் கொண்டு ‘NOTA’ படத்துக்காக சிம்பொனி இசையை உருவாக்கிய சாம் சிஎஸ்!
திறமையான இசையமைப்பாளரான சாம் சிஎஸ் தனது முதல் படமான "புரியாத புதிர்" படத்திலிருந்து, மிக குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறார். "NOTA" படத்துக்கான மகத்தான எதிர்பார்ப்பில் இருந்தே இது தெளிவாக தெரிகிறது. இளைஞர்களின் ஃபேவரைட் ஹீரோவான விஜய் தேவரகொண்டா, 'NOTA' மூலம் முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அவரை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஸ்டுடியோகிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. சாம் சிஎஸ் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன.
"பல ஆண்டுகளாக நான் ஒரு விஷயத்தை செய்யும் கனவில் இருந்து வந்தேன். இறுதியாக, NOTA படத்தின் மூலம் அதை நனவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுக்காமல் இருந்திருந்தால், இது சாத்த...