‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ – திரைவிமர்சனம்
குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள திகில் படமான ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.
வேலை இல்லாமல் இருக்கும் மூன்று இளைஞர்கள் சீக்கிரமாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. அவை அனைத்திற்கும் காரணம் பணம். இவர்களுடன் வயதில் மூத்தவரும் ஒருவர் சேர்ந்துக்கொள்ள அவருக்கும் பணம் தேவையாக இருப்பதால், இந்த நான்கு பேரும் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
அதன்படி, இந்த நான்கு பேர்களில் ஒருவரான விஸ்வந்த் தனது சொந்த அக்கா மகளை கடத்தி அவர்களிடம் பணம் பறிக்க திட்டமிடுபவர், இதில் தான் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல் தனது நண்பர்கள் மூலம் குழந்தையை கடத்தி தனது அக்கா, மாமாவிடம் பல கோடிகளை பறிக்கிறார். பணத்தை வாங்கிக்கொள்பவர்கள் குழந்தையை விட்டுவிடலாம் என்று நினைக்கும் போது, குழந்தை நான்கு பேரையும் பார்த்துவிடுகிறது. ...
