Wednesday, June 24
Shadow

காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்… “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!

காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்… “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!

 

சினிமா இசையில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இசையமைப்பாளர் சாம் சி எஸ், மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை தனது இசையால் கவர்ந்துள்ளார். AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான ‘இம்மார்டல்’ படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொதுவாக காதல் பாடல்கள் மென்மையான உணர்வுகளையும் இனிமையான வரிகளையும் மையமாகக் கொண்டு உருவாகும். ஆனால் “லவ் யூ லவ் யூ காட்டேரி” அந்த மரபை உடைத்து, காதலியை ஒரு மர்மமான “காட்டேரி” உருவமாக கற்பனை செய்து, அதனை நகைச்சுவை கலந்த காதல் உணர்வுடன் வெளிப்படுத்துகிறது. இந்த வித்தியாசமான அணுகுமுறையே பாடலை ரசிகர்களிடையே தனித்து நிற்கச் செய்துள்ளது.

சாம் சி எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல், முதல் முறை கேட்கும்போதே மனதில் பதியும் வகையிலான மெலடி அமைப்பைக் கொண்டுள்ளது. அதனுடன் இணைந்திருக்கும் டார்க் மூட் இசை, புதுமையான சவுண்ட் டிசைன் மற்றும் தாள அமைப்புகள் பாடலுக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன. பாடல் முடிந்த பின்னரும் அதன் மெட்டு மற்றும் ரிதம் மனதில் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் ரேஷ்மா ஷ்யாம் இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் ஷாலி சி எழுதிய வரிகள், காதலின் குறும்புத்தனத்தையும் மர்மத்தையும் ஒன்றாகக் கலந்து புதுமையான அனுபவத்தை வழங்குகின்றன.

பாடலின் காட்சிப்படுத்தலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவப்பு நிறத்தை மையமாகக் கொண்ட டார்க் விஷுவல் டோன், கண்கவர் நடன அசைவுகள் மற்றும் ஃபேண்டஸி கலந்த காட்சிகள் ஆகியவை இசையின் உணர்வை மேலும் வலுப்படுத்துகின்றன. குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் அதிக பகிர்வுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஒரு திரைப்படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு முன்கூட்டியே அறிமுகப்படுத்தும் முக்கிய கருவியாக பாடல்கள் செயல்படுகின்றன. அந்த வகையில் ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் மர்மமும், ஃபேண்டஸி பின்னணியும் இந்த பாடலின் மூலம் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை கையொப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள இந்த “லவ் யூ லவ் யூ காட்டேரி”, தற்போது இளைஞர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்து முணுமுணுக்கப்படும் புதிய ஹிட் பாடலாக உருவெடுத்து வருகிறது.

 

Sam C. S Turns Love into a Dark Fantasy Anthem with “Love You Love You Kaatteri” from Immortal

Music composer Sam C. S, known for constantly pushing creative boundaries with his soundtracks and independent musical experiments, has once again captured the attention of music lovers with the release of “Love You Love You Kaatteri,” the latest single from the upcoming fantasy thriller Immortal.

Produced by Arunkumar Dhanasekaran under the AK Film Factory banner, Immortal stars G.V. Prakash Kumar and Kayadu Lohar, and marks the directorial debut of Mariyappan Chinna. While the film itself has generated curiosity for its fantasy-thriller premise, the newly released song has emerged as a major talking point among audiences, particularly on social media.

What makes “Love You Love You Kaatteri” stand out is its unconventional take on romance. Unlike traditional love songs that celebrate affection through familiar imagery, this track imagines a lover as a mysterious “Kaatteri” (a mythical female spirit), blending romance, fantasy, and playful intrigue into a unique musical experience. The concept gives the song a fresh identity and sets it apart from the usual romantic numbers.

Sam C. S once again showcases his signature musical style through a memorable melody, layered with dark thematic elements and innovative sound design. The song strikes a balance between catchy hooks and atmospheric textures, creating an immersive listening experience that lingers long after it ends.

The track has been sung by Sam C. S and Reshma Shyam, while the lyrics are penned by Shali C. The song’s playful yet imaginative writing complements its fantasy-inspired theme, adding depth and character to the composition.

Visually, the song enhances its appeal through striking imagery. Set against a dominant red-toned backdrop with dark visual aesthetics, the video features stylish choreography and captivating screen presence. The seamless blend of music, dance, and visuals amplifies the song’s overall impact, making it especially appealing to younger audiences.

Within a short time of its release, “Love You Love You Kaatteri” has gained traction across digital platforms, drawing praise for both its musical originality and visual presentation. The song not only introduces audiences to the intriguing world of Immortal but also reinforces Sam C. S’s reputation as a composer who consistently delivers fresh and distinctive musical experiences.

With its haunting melody, imaginative concept, and contemporary soundscape, “Love You Love You Kaatteri” is quickly becoming a track that listeners find themselves humming long after the music stops.