ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்' மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றிருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்சநிலை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்த போதிலும், அவர் தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். பல்துறை வித்தகரான அவர் "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக...