பிக் பாஸ் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் போலீஸ் சாம்ராஜ்யம்,
பிக் பாஸ் ஓவியா நடித்து வெளிவரும் முதல் படம் போலீஸ் சாம்ராஜ்யம்,
உளவுத் துறை அதிகாரியாக பிருத்விராஜ்
அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் சாம்ராஜ்யம்.
பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.
களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னி ஆனஓவியா போலீஸ் சாம்ராஜ்யம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இயற்கை வளம் கொஞ்சும் கிராமத்தில் அப்பா அம்மா குழந்தைகள் என மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து கொலைகள் நிகழ்கிறது.
ஏன் இந்த கொலை குடும்பத்தில் மட்டுமல்ல அந்த ஊரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன.
உள்ளூர் காவல் துறையா...
