“பற படம் சமூகத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும்” பா.ரஞ்சித் பாராட்டு
ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது,
இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சி...