தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
பிக்பாஸ் ராஜு ஜெயமோகன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டார்க் ஹியூமர் திரைப்படம்
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது. தென்காசியைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளான மொட்டை, இடிந்தகரை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் டார்க் ஹியூமர் பாணியில் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட அரங்குகள் அல்லது செயற்கையாக அமைக...




