ரசிகர்களின் கொண்டாட்டத்தில் தனுஷின் பட்டாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
"ஒரு புகைப்படம் 1000 விஷயங்களை சொல்கிறது" என்ற ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. அது எப்போதுமே சினிமாவில் மிகச்சிறந்த நிரூபிக்கப்பட்ட கோட்பாடாக இருந்து வருகிறது. படத்தின் முதல் தோற்றம் படம் எதை பற்றியது, எப்படிப்பட்டது என பார்வையாளர்களை தயார்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் அளவில், உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் "பட்டாஸ்" எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34'ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஆடம்பரமான விருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ‘தனு...