பழைய வண்ணாரப்பேட்டை – திரை விமர்சனம் RANK 5/3
நாயகன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, அந்த சந்தோஷத்தில் டாஸ்மாக்கில் சென்று பார்ட்டி கொண்டாடிவிட்டு, வழியில் ஒரு கடையில் சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
இவர்கள் திரும்பிய மறுநிமிடம் இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டி சாய்க்கிறது. சம்பவ இடத்திற்கு வரும் போலீசார், அப்போது அந்த கடைக்கு வந்து சென்றவர்களை பற்றிய விவரங்களை கேட்கிறது. அப்போது நாயகன் மற்றும் அவரது நண்பர்களை பற்றிய தகவலை போலீசாருக்கு கடைக்காரர் கொடுக்கிறார்.
அதன்பேரில், பிரஜின் மற்றும் அவரது நண்பர்களை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜான், நிஷாந்த் ஆகியோருடன் பிரஜின் மற்றும் அவரது நண...
