இயக்குனர் ராம் மனைவி பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் “பேரன்பு”
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என தமிழ் சினிமாவிற்கு சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது.
இதில் மம்மூட்டி, அஞ்சலி, 'தங்கமீன்கள்' சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்
இத்திரைப்படத்தின் பாடல்களும், முன்னோட்டக் காட்சிகளும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர்கள் ராம், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், நடிகர்கள் சித்தார்த், மம்மூட்டி, நடிகை அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது விழா மேடையில் பேசிய ராம், "பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இல்லாமல் வெளியாகும் என் முதல் படம் இது. தமிழ் உள்ளவரை நா.முத்துக்குமார் இருப்பார். என் மனைவி சுமதி ராம் இப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
...



