சென்னை வந்தார் அஜித் : அதிகாலையில் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி!
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘ஏ.கே 57’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் பல நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்காக பல்கேரியா காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட படக்குழுவினருடம் பல்கேரியா சென்றிருந்தார் அஜித்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு 11: 30 மணியளவில் காலமானார் என்கிற செய்தி வெளியானது. இந்த தகவல் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே அ.தி.மு.க அபிமானி என்று சொல்லப்பட்டு வருபவர் அஜித் என்பது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா மீது தீவிர பற்றும், பாசமும் கொண்டவர் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம்.
இதனால் ஜெ மறைவுச் செய்தி கேட்டு சோகமான அஜித் எப்படியாவது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் நேற்று உடனடியாக சென்னை திரும்ப முடியாத ...
