ரஜினியின் கட்சி, சின்னம் மதுரையில் அறிவிக்கப்படலாம் – ராகவா லாரன்ஸ்!
மதுரை: டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட, மாநகர் தலைமை நற்பணி மன்றங்கள் சார்பில் ரஜினியின் 68-வது பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஒன்றிய-நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா அழகர்கோவிலில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது: 12 வயதில் இருந்து ரஜினியின் ரசிகராக உள்ளேன். மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்று நடத்தும் திட்டம் உள்ளது. அதில் கட்சியின் பெயர், சின்னம், கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மண் அரசியல் பிரவேசத்துக்கு முக்கியமான தளமாக இருப்பதால் அவர் மதுரையில் இருந்து அரசியல் தொடங்குவார் எனக் கருதுகிறோம். அவரது ஆன்மிக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலை...
