மணிரத்தினம் படத்தின் இணைந்த சூப்பர்ஸ்டார்
'செக்கச்சிவந்த வானம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மிக முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
மேலும் இந்த படத்தில் விக்ரம் முதன்மை வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்துக்கு அபியும் நானும், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் குமாரவேல் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம். அந்த வேடம் சோழர் நாட்டு இளவரசியான குந்தவியின் வேடம் என்று கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
...