“86-ஆம் ஆண்டின் மண்வாசனை காதலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘பூ காய் கனி’!”
“86-ஆம் ஆண்டின் மண்வாசனை காதலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘பூ காய் கனி’!”
தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையையும் உணர்வுப்பூர்வமான கதைகளையும் தனித்துவமாக சொல்லி வந்த இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம், தனது அடுத்த படைப்பாக “பூ காய் கனி” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு, விசிறி போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர், தற்போது முழுக்க முழுக்க 1986-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட ஒரு அழகிய கிராமத்து காதல் கதையை மூன்று பரிமாணங்களில் சொல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்தப் படத்தை பழையனூர் சந்தனம் பட கம்பெனி சார்பில் ராஜேஸ்வரி வெற்றிவீரன் தயாரிக்கிறார். சூட்கேஸ் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த அனுபவத்துடன், இந்தப் படத்தையும் வித்தியாசமான முறையில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
படத்தின் தலைப்பே கவிதை நயத்துடன் ரசிகர்களை கவரும் வக...
