சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’ – குடும்பத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிரடி மனிதன்!
சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’ – குடும்பத்திற்குள் ஒளிந்திருக்கும் அதிரடி மனிதன்!
தலைப்பு வீடியோ வெளியீடு… மீண்டும் இணைந்த ‘இருமுகன்’ கூட்டணி – கமர்ஷியல் ஆக்ஷனுக்கு தயாராகும் விக்ரம்!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் சீயான் விக்ரம், தற்போது புதிய அதிரடி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என அதிகாரப்பூர்வமாக தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு விக்ரமின் கதாபாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ ...
