
பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் கடத்தப்பட்டார் மீட்டு தர குடும்பத்தினர் குமுறல்
பவர்ஸ்டார்
சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களிலும்
நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க
செல்வதாக கூறிய பவர்ஸ்டார் கடந்த 5-ஆம் தேதி முதல்
வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவரை கண்டுபிடித்துத் தருமாறு அண்ணாநகர் போலீஸ்
நிலையத்தில் அவரது மனைவி ஜூலி புகார் அளித்துள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்
பவரின் மனைவி ஜூலியையும் காணவில்லை என அவரது மகள் வைஷ்ணவி ஒரு புகார்
அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அப்பா
பவர்ஸ்டாரை கடந்த 5-ஆம்
தேதி முதல் காணவில்லை என கார் டிரைவர், அம்மா ஜூலிக்கு போன்
செய்து தகவலை தெரிவித்தார். இதையடுத்து அன்று மாலை 4 மணிக்கு
அப்பாவே அம்மாவுக்கு போன் செய்து நான் உன்னை பார்க்க வேண்டும். நீ ச...