நடன இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் “தேள்”
தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ஸ்டுடியோகிரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். "தேள்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.
எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குனராக செந்தில் ராகவன் மற்றும் சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோர் பணி புரிகிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரி குமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார்.
"ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்...