Friday, November 13
Shadow

Tag: Preethi Mukundhan

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

Shooting Spot News & Gallerys
மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!” என்ற வித்தியாசமான அறிவிப்புடன் படக்குழு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. ‘D56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகர்களும் இளம் த...
“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

Shooting Spot News & Gallerys
“என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” – ‘அன்பில் அவன் நாயகி’ விழாவில் ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி ‘அன்பில் அவன் நாயகி’ திரைப்பட விழாவில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நீண்ட உரையைத் தயாரித்து வந்ததாகக் கூறிய அவர், அதைச் சுருக்கமாக வைத்துக்கொண்டு படக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். படத்தின் பின்னணியில் இருந்து உழைக்கும் கலைஞர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட ப்ரீத்தி, தயாரிப்பாளர் அபியைப் பற்றி பேசும்போது, “இந்தப் படத்திற்காக அவர் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். ஒரு விஷயம் உண்மையிலேயே மதிப்புமிக்கது என்று நம்பினால், அதற்காக ஒரு பெண் எவ்வளவு தூரம் போராட முடியும் என்பதற்கு அபி ஓர் அழகான உதாரணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தன்னுடைய ஒவ்வொரு படைப்பையும் தொடர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் அஷோக் மற்றும...
காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’!

காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’!

Latest News, Top Highlights
காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’! ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு – சித் ஸ்ரீராமின் குரலில் காதல் பிரிவின் ஏக்கம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலின் இனிமையான தருணங்களை மட்டுமல்லாமல், காதலுக்குள் மறைந்திருக்கும் வலி, பிரிவு, ஏக்கம், காதலியின் மீதான பெருமை என உணர்வுகளின் மற்றொரு பரிமாணத்தைப் பதிவு செய்யும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். இளம் தலைமுறையினரின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் முதல் சிங்கிளான “ஆசை வரமே” ஏற்கனவே காதலின் நெருக்கமான தருணங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த...
‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Shooting Spot News & Gallerys
‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு! சென்னை: இளம் தலைமுறையின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதல் என்றாலே கொண்டாட்டம் மட்டுமல்ல; அதில் இருக்கும் நெருக்கம், எதிர்பார்ப்பு, செல்லச் சண்டை, ஊடல் என பலவிதமான உணர்வுகளும் சேர்ந்ததுதான். அந்த உணர்வுகளை அழகான மெலடி வழியாகக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது ‘ஆசை வரமே’ பாடல். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை...” என்ற மென்மையான வரிகளுடன் தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழத்தையும், காதலர்களுக்குள் இருக்கும் பிரிக்க முடியாத பந்தத்தையும் இசையுடன் பதிவு செய்கிறது. பாடலாசிரியர் மெட்ராஷீ எழுதியுள்ள வரிகளுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வஸந...
காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான்?

காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான்?

Latest News, Top Highlights
‘காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான்?’ அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ — காதலுடன் கனவுகளையும் பேச வரும் புதிய திரைப்பயணம்! சென்னை: காதல் கதைகள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், ஒரு காதல் கதையை எந்த கோணத்தில் சொல்கிறோம் என்பதில்தான் அதன் தனித்துவம் இருக்கிறது. அந்த வகையில் காதலுடன் பெண்களின் கனவு, அதை நோக்கிய பயணம், போராட்டம், வெற்றி என பல உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கும் பணியையும் படக்குழு தொடங்கியுள்ளது. ‘காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான்?’ என்பதையே படத்தின் ஒன்லைனாக வைத்திருப்பதாக அசோக் செல்வன் கூறியிருப்பது, ‘அன்பில் அவன்’ ப...