பிரேம்ஜி இசையமைத்து நாயகனாகும் புதிய மியூசிக்கல் ஹாரர் படம் பூஜையுடன் தொடக்கம்!
பிரேம்ஜி இசையமைத்து நாயகனாகும் புதிய மியூசிக்கல் ஹாரர் படம் பூஜையுடன் தொடக்கம்!
மும்பெரும் வரவேற்பைப் பெற்ற "வல்லமை" திரைப்படத்தைத் தொடர்ந்து, பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இசையும் திகிலும் இணையும் வித்தியாசமான முயற்சியாக உருவாகும் இந்த புதிய மியூசிக்கல் ஹாரர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.
இந்த திரைப்படத்தை கருப்பையா முருகன் தயாரித்து இயக்குகிறார். வணிக அம்சங்களுடன் புதுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாகி வரும் இப்படம், மியூசிக்கல் ஹாரர் ஜானரில் புதிய அனுபவத்தை தரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரேம்ஜி நடிக்கிறார். மேலும் மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். நடிகை ...
