Tuesday, August 4
Shadow

பிரேம்ஜி இசையமைத்து நாயகனாகும் புதிய மியூசிக்கல் ஹாரர் படம் பூஜையுடன் தொடக்கம்!

பிரேம்ஜி இசையமைத்து நாயகனாகும் புதிய மியூசிக்கல் ஹாரர் படம் பூஜையுடன் தொடக்கம்!

மும்பெரும் வரவேற்பைப் பெற்ற “வல்லமை” திரைப்படத்தைத் தொடர்ந்து, பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இசையும் திகிலும் இணையும் வித்தியாசமான முயற்சியாக உருவாகும் இந்த புதிய மியூசிக்கல் ஹாரர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்த திரைப்படத்தை கருப்பையா முருகன் தயாரித்து இயக்குகிறார். வணிக அம்சங்களுடன் புதுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாகி வரும் இப்படம், மியூசிக்கல் ஹாரர் ஜானரில் புதிய அனுபவத்தை தரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரேம்ஜி நடிக்கிறார். மேலும் மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். நடிகை அனு ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கதாநாயகனாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பிரேம்ஜி பணியாற்றுகிறார். திகில் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி கவனிக்க, படத்தொகுப்பை விதுஜீவா மேற்கொள்கிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படைப்பாக உருவாகும் வகையில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

படப்பிடிப்பின் முதல் நாளிலேயே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் உற்சாகமாக கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கினர். தற்போது படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மியூசிக், மர்மம், திகில் ஆகிய மூன்றையும் இணைத்து ரசிகர்களுக்கு புதிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாகி வரும் இந்த புதிய திரைப்படம், விரைவில் தனது அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Premgi-Amaren’s New Musical Horror Film Goes on Floors; Butler’s Cinema Launches Its Next Venture

Following the success of Vallamai, Butler’s Cinema has officially launched its next production, a musical horror film that promises to offer audiences a fresh cinematic experience by blending music with supernatural thrills. The film recently commenced shooting with a traditional pooja ceremony.

The project is produced and directed by Karuppaiah Murugan, who aims to present a unique entertainer combining commercial appeal with an engaging horror narrative. The film is expected to bring a refreshing take to the musical horror genre.

Premgi Amaren plays the lead role in the film and also composes the music, making it a special dual-role project for the actor-musician. Joining him in pivotal roles are Melvin David, Sahithya, and Master Adarsh Anandan, while Anu Haasan will be seen in a special appearance, adding further excitement to the project.

The film’s cinematography is handled by Suraj Nallusamy, with Vidhu Jeeva serving as the editor. The makers are focusing on delivering a technically polished film with a strong emphasis on music, atmosphere, and suspense.

The inaugural day of shooting witnessed the presence of the lead cast and technical crew, who marked the beginning of the project with enthusiasm. Production is currently progressing at a brisk pace as the team continues filming.

Combining captivating music, eerie storytelling, and gripping suspense, the yet-to-be-titled musical horror film is expected to offer audiences a distinctive theatrical experience. The makers are expected to announce more details about the project in the coming weeks.